HomeBreaking News'டீசல்' படத்தின் இரண்டாவது பாடல் இணையத்தில் வைரல்!

‘டீசல்’ படத்தின் இரண்டாவது பாடல் இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

டீசல் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.'டீசல்' படத்தின் இரண்டாவது பாடல் இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவில் பியார் பிரேமா காதல், தாராள பிரபு ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் வெளியான பார்க்கிங், லப்பர் பந்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படங்களாக அமைந்திருக்கிறது. இதற்கிடையில் இவர், டீசல் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சண்முக முத்துசாமி இயக்கியுள்ள நிலையில் திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தர்ட் ஐ என்டர்டைன்மென்ட் நிறுவனமும் எஸ் பி சினிமாஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வந்த நிலையில் நங்கூரமா இறங்குற எனும் பாடலும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து தற்போது தில்லுபரு ஆஜா எனும் இரண்டாவது பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிம்பு பாடி இருக்கும் இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ