இயக்குனர் செல்வராகவன் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
செல்வராகவன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் மெண்டல் மனதில் எனும் திரைப்படத்தையும் ரவி கிருஷ்ணா, அனஸ்வரா ராஜன் நடிப்பில் 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கத்தில் “நெக்ஸ்ட் லெவலுக்காக காத்திருங்கள்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும்போது இது ஆயிரத்தில் ஒருவன் 2 படம் தொடர்பான அப்டேட் போல் தெரிகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென், பார்த்திபன் ஆகியோரின் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியானது. இந்த படமானது நிகழ்காலத்துடன் கடந்த காலத்தை தொடர்புப்படுத்தும் விதமாகவும் கடந்த காலத்தில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையிலான பகையை காட்டும் விதமாகவும் அமைந்திருந்தது. இன்று வரையிலும் இது போன்ற படங்கள் வெளிவரவில்லை. அந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் செல்வராகவன் கொடுத்திருக்கும் இந்த அப்டேட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. இருப்பினும் விரைவில் இது என்ன அப்டேடாக இருக்கும் என்பதை செல்வராகவன் உறுதி செய்வார் என்று நம்பப்படுகிறது.