ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி என்ற அறிவிப்பை தொடர்ந்து ஜனவரி 10 முதல் 17 ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 58 மணுக்கள் பெறப்பட்ட நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, அப்பகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதைச் சேர்ந்த அறிவிப்பு ஜனவரி 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது, உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. ஜனவரி 10 முதல் 17 ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 58 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
பெறப்பட்ட 55 மனுக்களில், தி.மு.க, நாம் தமிழர் கட்சி, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதில், 8 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் இறுதியாக 47 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் களத்துக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- திமுகவினர் வீடு வீடாக தீவிர பிரச்சாரம்..