கேங்கர்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்களை சேகரித்து வைத்தவர் வடிவேலு. இவர் மாமன்னன் படத்தில் மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். அடுத்தது மாரீசன் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேங்கர்ஸ் திரைப்படத்தில் மீண்டும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். சுந்தர். சி இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க கேத்தரின் தெரசா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் தயாரிக்க சி. சத்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.
இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி இணையத்தை கலக்கியது. அதைத்தொடர்ந்து இந்த படத்திலிருந்து ‘குப்பன்’ எனும் பாடல் வெளியாகி உள்ளது. வழக்கம்போல் சுந்தர்.சி யின் படங்களில் இருக்கும் கிளாமர் இந்த பாடலிலும் அதிகமாக இருக்கிறது. அதன்படி தூக்கலான கிளாமரில் கேத்தரின் தெரசா நடனமாடியுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை மீனாட்சி மற்றும் குணா சுந்தரி ஆகியோர் பாடி இருக்கும் நிலையில் பா. விஜய் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.