அஜித் நடிப்பில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதாவது துணிவு திரைப்படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித்தை திரையில் காண துடிப்பாக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களை விடாமுயற்சி திரைப்படம் திருப்திபடுத்தவில்லை. ஆனால் அதைத் தொடர்ந்து வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்திருக்கிறது. அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன், ரசிகர்கள் எப்படி எல்லாம் அஜித்தை பார்க்க நினைத்தார்களோ அப்படியெல்லாம் மாஸாகவும், கலகலப்பாகவும், ஸ்டைலிஷஷாகவும் காட்டி இருந்தார். இதனை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் இந்த படம் வசூலிலும் பட்டைய கிளப்பி வருகிறது. இந்த வகையில் ஏற்கனவே வெளியான முதல் நாளில் உலக அளவில் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக செய்துள்ளது என படக்குழு அறிவித்திருந்தது.
Tamil Nadu box office on fire #GoodBadUgly pic.twitter.com/exQthXOPER
— G.V.Prakash Kumar (@gvprakash) April 15, 2025
அதைத்தொடர்ந்து இப்படம் உலக அளவில் ரூ. 100 கோடியை கடந்து விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 5 நாட்களில் ரூபாய் 100 கோடி வசூலை கடந்து விட்டதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 200 கோடி வசூலித்திருக்கும் என்று சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் அஜித்தின் திரை பயணத்தில் குறுகிய நாட்களில் அதிக வசூலை வாரி குவித்த திரைப்படம் என்ற பெருமையை குட் பேட் அக்லி திரைப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.