HomeBreaking Newsயாரையும் நம்பாதே..... ஜி.வி. பிரகாஷின் 'பிளாக்மெயில்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

யாரையும் நம்பாதே….. ஜி.வி. பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

ஜி.வி. பிரகாஷின் பிளாக்மெயில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.யாரையும் நம்பாதே..... ஜி.வி. பிரகாஷின் 'பிளாக்மெயில்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் சினிமாவில் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பதோடு, தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்தும் வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் கிங்ஸ்டன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் இடி முழக்கம், மெண்டல் மனதில் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் பிளாக்மெயில் எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தை மு. மாறன் எழுதி இயக்க ஷாம் சி.எஸ். இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி ப்ரியா மற்றும் பலர் நடிக்கின்றனர்.யாரையும் நம்பாதே..... ஜி.வி. பிரகாஷின் 'பிளாக்மெயில்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இப்படம் 2025 மே மாதத்தில் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரை பார்க்கும்போது இப்படம் திரில்லர் ஜானரில் இருக்கும் போல் தெரிகிறது. அதே சமயம் இந்த போஸ்டரில் DON’T TRUST ANYONE என்ற டேக் லைனும் இடம்பெற்றுள்ளது. இப்போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ