Homeசெய்திகள்கனமழை எச்சரிக்கை: திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

கனமழை எச்சரிக்கை: திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – மாவட்ட ஆட்சியர்

-

- Advertisement -

கனமழை எச்சரிக்கை - பள்ளிகள்,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

புயல் சின்னம் மற்றும் கனமழை நீடிப்பு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், புதன்கிழமை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் , திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலான மழை பெய்து வருவதாலும், இந்திய வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் நாளை (27.11.24) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

MUST READ