HomeBreaking News'அமரன்' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை! - சென்னை உயர் நீதிமன்றம்

‘அமரன்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை! – சென்னை உயர் நீதிமன்றம்

-

'அமரன்' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை! - சென்னை உயர் நீதிமன்றம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமரன் படத்தை சட்டவிரோதமாக ஆயிரத்து 957 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க உத்தரவிடக்கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டெர்நேஷனல் நிறுவனம் வழக்கு பதிவு செய்தது.

'அமரன்' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை! - சென்னை உயர் நீதிமன்றம்

உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் அமரன் படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ள நிலையில் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டெர்நேஷனல் நிறுவனம் தரப்பு  வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் அமரன் படம் வெளியாகயுள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், அதன்மூலம் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து, அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என்று இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

‘அமரன்’ ப்ரோமோஷன் பணிகள் தீவிரம் …. ஜெட் விமானத்தில் வந்திறங்கிய சிவகார்த்திகேயன்!

MUST READ