HomeBreaking Newsவிண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் புதிய சாதனை- உலகில் இந்தியாவிற்கு மதிப்பு உயர்கிறது

விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் புதிய சாதனை- உலகில் இந்தியாவிற்கு மதிப்பு உயர்கிறது

-

- Advertisement -

இஸ்ரோவின் விண்வெளி ஆய்வின் அடுத்த மைல்கல்லாக டாக்கிங் சிஸ்டம் சோதனை செய்வதற்கான ஸ்பேடக்ஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நேற்று விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், மற்ற கோள்களில் இருந்து மாதிரிகளை எடுத்து வருதல் உள்ளிட்ட பணிகளுக்கு தொடக்கமாக இந்த சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஸ்பேடக்ஸ் என்கிற முக்கியத்துவம் வாய்ந்த சோதனை திட்டத்திற்கான செயற்கைக்கோளை திங்கட்கிழமை இரவு விண்ணில் ஏவியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி -சி60 ராக்கெட் மூலம் ஸ்பேடக்ஸ் என்கிற பெயரில் தலா 220 கிலோ எடைகொண்ட இரண்டு செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் விண்வெளியில் இணைந்து(டாக்கிங்), தரவு பரிமாற்றம் செய்து மீண்டும் பிரிக்கப்படவுள்ளது.

டாக்கிங் என்பது விண்வெளியில் இருக்கும் இரண்டு விண்கலன்களை இணைப்பது மட்டும் இல்லாமல் அந்த இணைக்கப்பட்ட இரண்டு விண்கலன்களுக்கு இடையே ஆற்றல் பரிமாற்றம்,டேட்டா பரிமாற்றம் ஆகியவற்றை செய்வது ஆகும். ஆனால் அதனை புவி ஈர்ப்பு விசை மற்றும் வளிமண்டலம் இல்லாத விண்வெளியில் மணிக்கு குறைந்தது 28000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்போது இந்த சவாலான பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக ஸ்பேடக்ஸ் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி-சி60 ராக்கெட் மூலம் திங்கட்கிழமை இரவு 10 மணி 5 வினாடியில் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 912 வது வினாடியில் ஸ்பேடக்ஸ் -பி செய்ற்கைக்கோளும், 918வது வினாடியில் ஸ்பேடக்ஸ்-ஏ செயற்கைக்கோளும் 476 கி.மீ உயரத்தில் அதனதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதனை கட்டுப்பாட்டு அறையிலிருந்த விஞ்ஞானிகள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், சதீஷ் தவானில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட 99 வது ராக்கெட் இதுவாகும். இந்த மிஷன் 24 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பே-லோடுகளை எடுத்து சென்றுள்ளது. Spadex நாளை முதல் பல செயல்பாடுகளை தொடர உள்ளது. வரும் 7 ஆம் தேதி இரண்டு விண்கலன்களையும் இணைக்கும் நிகழ்வை பார்க்க கூடும். இன்னும் பல விதமான ஸ்பேஸ் டாக்கிங் செயல்பாடுகள் அடங்கிய அடுத்தடுத்த விண்கலன்கள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளன. டாக்கிங் என்பது விண்ணில் விண்வெளி மையத்தை கட்டமைக்க மிகவும் முக்கியமான முறையாகும். இன்று ஏவப்பட்டுள்ள விண்கலன்கள் ஒரு முயற்சியாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தேவைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளது. எதிர்காலங்களில் இன்னும் தீவிரமான டாக்கிங் செயல்பாடுகளுக்கான விண்கலன்களை இஸ்ரோ விண்ணில் ஏவப்பட உள்ளது

விண்வெளியில் உணவு வகைகளை உற்பத்தி செய்து அவற்றை உண்பது போன்ற உயிரியல் ஆராய்ச்சிகளை ஏற்கனவே நமது சுனிதா வில்லியம்ஸ் செய்துள்ளார். பலரும் இது போன்ற ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். அனைத்திற்குமான வாய்ப்பு என்பது இருக்கிறது.

தொடர்ந்து பேசிய திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு( LPSC) இயக்குனர் நாராயணன், இந்த டாக்கிங் சிஸ்டம் சோதனை வெற்றியின் மூலம் உலகிலேயே நான்காவது நாளாக டாக்கிங் சிஸ்டம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும். மனிதனை விண்ணுக்கு அனுப்புவது, விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தை நிறுவுவது, தரவுகளை சேகரிப்பது சந்திராயன்-4 திட்டம் உள்ளிட்ட எதிர்கால திட்டங்களுக்கு இது அடிப்படை சோதனையாக இருக்கும், என்றார்.

திட்ட இயக்குனர் சுரேந்திரன் பேசும்போது, இந்தத் திட்டத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மற்ற செயற்கைக்கோள் போல் அல்லாமல் மிக வேகமாக பயணிக்க கூடிய இரண்டு செயற்கைக்கோள்களை மிக துல்லியமாக சென்சார்கள் மூலமாக அதனுடைய வேகத்தை குறைத்து, எந்த சேதமும் இல்லாமல் அதனை இணைத்து தலைவர்களை பரிமாற்றி பின்பு மீண்டும் பிரித்து என்பது மிக சவாலான விஷயம், இதனை ஜனவரி 7ஆம் தேதி மேற்கொள்ள உள்ளோம், என்றார்.

MUST READ