HomeBreaking Newsகமல் - சிம்பு நடனமாடும் 'ஜிங்குச்சா' பாடல்.... புதிய போஸ்டரை வெளியிட்ட 'தக் லைஃப்' டீம்!

கமல் – சிம்பு நடனமாடும் ‘ஜிங்குச்சா’ பாடல்…. புதிய போஸ்டரை வெளியிட்ட ‘தக் லைஃப்’ டீம்!

-

- Advertisement -

தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.கமல் - சிம்பு நடனமாடும் 'ஜிங்குச்சா' பாடல்.... புதிய போஸ்டரை வெளியிட்ட 'தக் லைஃப்' டீம்!

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. அதே சமயம் இவர் அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் தனது 237 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல். இந்த படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து திரிஷா, கௌதம் ராம் கார்த்திக், அசோக் செல்வன், ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். நாயகன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மணிரத்னம், கமல் கூட்டணி இந்த படத்தில் இணைந்திருக்கும் நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்புகளும் நிறைவடைந்து படமானது 2025 ஜூன் 5 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது.

இந்நிலையில் தான் இப்படத்திலிருந்து ஜிங்குச்சா பாடல் நாளை (ஏப்ரல் 18) வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது இது தொடர்பாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்க்கும்போது கமல் மற்றும் சிம்பு இருவரும் நடனமாடும் பாடல் என்பது தெரியவந்துள்ளது. கமல் மற்றும் சிம்புவின் நடனத்தை பற்றி சொல்லவே வேண்டாம். எனவே இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ