HomeBreaking Newsகவின் நடிக்கும் 'கிஸ்'..... காதலர் தினத்தன்று வெளியான டீசர்!

கவின் நடிக்கும் ‘கிஸ்’….. காதலர் தினத்தன்று வெளியான டீசர்!

-

- Advertisement -

கவின் நடிக்கும் கிஸ் படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.கவின் நடிக்கும் 'கிஸ்'..... காதலர் தினத்தன்று வெளியான டீசர்!

நடிகர் கவின் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தார். அடுத்தது இவரது நடிப்பில் வெளியான லிஃப்ட், டாடா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இதன் பிறகு நடிகர் கவின் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாஸ்க், ஹாய் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார் கவின். இதற்கிடையில் இவர் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு கிஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இந்த படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் இன்று (பிப்ரவரி 14) காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

MUST READ