HomeBreaking Newsஜன.6ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

ஜன.6ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

-

2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது சட்டப்பேரவை.
ஜன.6ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
ஜன.6ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன்  தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ம் தேதி தொடங்குகிறது என அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும் என்றும் கடந்த ஆண்டு ஆளுநர் முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் வாசித்தார். இந்த முறை முழுமையாக வாசிப்பார் என்று நம்புகிறேன் என தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர் 100 நாட்கள் சட்டமன்றம் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, குளிர் கால கூட்டத்தொடர் கடந்த காலங்களில் 2 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் விதிமுறை காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அதிகமாக நடத்த முடியவில்லை. வெள்ளம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது அரசு இயந்திரங்கள் களத்தில் இருக்க வேண்டிய சூழல் இருந்தது. மானிய கோரிக்கை கூட்டுத்தொடர் காலை, மாலை என இரு வேலைகளில் நடைபெற்ற போது அரசு அதிகாரிகள் கடுமையாக உழைத்தனர். அரசின் எண்ணம் 100 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவதுதான் என்றும்
வரக்கூடிய நாட்களில் அதை பூர்த்தி செய்யும் விதமாக கூட்டம் நடத்தப்படும். எதிர்கட்சி தலைவருக்கு உரிய அந்தஸ்து, நேரம் கொடுக்கப்படுகிறது. பூஜ்ஜிய நேரத்தில் பேசுவதற்கு எதிர்கட்சி தலைவருக்கு உரிமை உள்ளது.

ஆனால் அரை மணி நேரத்திற்கு முன்னதாக சபாநாயகருக்கு தெரிவிக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனாலும் முதலமைச்சர் கோரிக்கைக்கு ஏற்ப எதிர்கட்சி தலைவர் பேச அனுமதி அளித்தோம். சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற வித்தியாசத்தை அரசு பார்ப்பதில்லை என்றும் ஜனநாயக ரீதியில் சட்டமன்றம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

ஆளுநர் உரையை முழுமையாக படிப்பார் என மீண்டும் நம்புகிறோம். ஆளுநருக்கு உரை நிகழ்த்த தான் அனுமதியே தவிர கருத்து சொல்ல அனுமதி இல்லை என இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி. ஆளுநருக்கு உரிய மரியாதை வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து… ராணுவம் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..!

MUST READ