HomeBreaking Newsமதுரை: ரூ.600 கோடி செலவில் டைடல் பார்க் -  தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வு

மதுரை: ரூ.600 கோடி செலவில் டைடல் பார்க் –  தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வு

-

 

மதுரை: ரூ.600 கோடி செலவில் டைடல் பார்க் -  தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வு

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சுமார் ரூ.600 கோடி செலவில் அமைய உள்ள ‘டைடல் பார்க்’ கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வு

மதுரை மாநகராட்சி அக.24ம் தேதி அன்று நடைபெற்ற மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், மதுரையில் வரவிருக்கும் டைடல் பார்க் திட்டத்திற்கு முன்பு ஒதுக்கப்பட்ட 5.6 ஏக்கர் நிலத்திற்கு கூடுதலாக 4 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு மொத்தம் 9.6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது . இந்த முடிவு டைடல் பார்க்கின் விரிவாக்கத்திற்கு பெரிய அளவில் வழிவகுக்கும் என மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

வெகுகாலமாக மதுரை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 12 தளங்களுடன் அமையவுள்ள டைடல் பார்க்  கட்டுமானத்திற்கான டெண்டர் குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது.

இந்நிலையில் தற்போது மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சுமார் ரூ.600 கோடி செலவில் 5.63 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள ‘டைடல் பார்க்’ கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வு செய்துள்ளார்.

MUST READ