நானி நடிக்கும் ஹிட் 3 படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் தமிழில் வெப்பம், நான் ஈ ஆகிய படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் சூர்யாவின் சனிக்கிழமை எனும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் நடிகர் நானி, டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கிடையில் இவர் ஹிட் 3 எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு ஹிட் : தி ஃபர்ஸ்ட் கேஸ் எனும் திரைப்படம் வெளியானது. அதன் பின்னர் 2022ல் ஹிட் : தி செகண்ட் கேஸ் எனும் திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஹிட் 3 -(ஹிட்: தி தேர்ட் கேஸ்) எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வால் போஸ்டர் சினிமா, அன்அனிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தை சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். நானியின் 32 வது படமான இந்த படம் 2025 மே 1 திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் வன்முறை காட்சிகள் அதிகம் காட்டப்படுகின்றன. இந்த டீசர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.