போலீஸ் வேலையில் இருக்கிறோம் என்ற திமிரில் குடிபோதையில் அடுத்தவன் மனைவியிடம் தகராறு செய்த மாட்டிக் கொண்டவர், ஜெயிலுக்கு போவதற்கு சிறிதும் வெட்கப்படாமல் மீசையை முறுக்கி கொண்டு செல்லும் காட்சி வைரலாகி வருகிறது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி சவுண்டபூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி(38), இவர் கடந்த 2008-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்துள்ளார், (இன்னும் திருமணம் ஆகவில்லை)
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 1 1/2 ஆண்டுகளாக பணிக்குச் செல்லாமல் இருந்து வருகிறார். (Deserter from duty)
இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம், தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த ராணி (27) என்பவருடன் காவலர் கார்த்தி கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
ராணி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவருடன் கார்த்திக்கு பழக்கம் ஏற்பட்டு ஒன்றாகவே இருந்து வந்துள்ளனர், இந்த நிலையில் ராணியின் கணவர் திரும்ப வந்ததன் காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கும் – ராணிக்கும் உள்ள கள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து ராணி அவரது கணவரோடு வாழ்ந்து வரும் நிலையில், நேற்று இரவு ராணியின் வீட்டிற்கு குடிபோதையில் சென்று கார்த்திக் தகராறில் ஈடுபட்டுள்ளார், தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த நிலையில் இன்று காலை மீண்டும் அவரின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து இது குறித்து ராணி அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார், புகாரை
அடுத்து சம்பவ இடத்திற்கு அந்தியூர் காவல் நிலைய தலைமை காவலர் ராமச்சந்திரன் மற்றும் பெண் போலீசார் சென்றுள்ளனர்.
அப்போது தலைமை காவலர் ராமச்சந்திரனை சட்டையை பிடித்து இழுத்தும் , கிழித்தும் தகாத வார்த்தையால் திட்டியதோடு அங்கு சென்ற பெண் காவலர்களையும் மிகத் தரை குறைவான வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
மேலும் காவல் நிலையத்திற்கு போன் செய்த ராணியிடம் பொது இடத்தில் தவறாக நடந்தும் தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளார்.
தொடர்ந்து குடிபோதையில் இருந்த கார்த்திகை காவலர்கள் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தும் போது அங்கேயும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
போதை சற்று இறங்கியவுடன் அவர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த அந்தியூர் போலீசார் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடைய காவலரை சிறைக்கு அழைத்துச் செல்லும்போது செய்தியாளர்கள் வீடியோ எடுத்த போது நான் என்ன இரண்டு கொலைகளை செய்து விட்ட சிறைக்குச் செல்கிறேன் என கூறிக் கொண்டே மீசையை முறுக்கிக் கொண்டு அட்டகாசம் செய்தார்.
காவலரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.