சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பத்தூர் தொழில்பேட்டையானது அன்றைய முதலமைச்சர் காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அம்பத்தூர் தொழில்பேட்டையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி என உதிரி பாகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
ஆசியாவில் மிகப்பெரிய தொழில்பேட்டையானது அம்பத்தூரில் அமைந்துள்ளது.
இதன் அருகில் டாஸ் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் தொழிற்சங்கம் 1990 இல் இருந்து இயங்கி வருகிறது. ஒன்பது லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட டாஸ் தொழிற்சங்கத்தின் (Tass Industrial Estate) கீழ் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனங்களில் இருந்து மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், அறுவை சிகிச்சை கருவிகள், லப்பர் மோல்டிங் ஸ்டாம்பிங், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் என பலதரப்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சரியான சாலை வசதி இல்லாமலும் மின்விளக்குகள் இல்லாமலும் பெரும் மின்னலுக்காகி வருகின்றனர்.
வருடத்திற்கு சென்னை மாநகராட்சிக்கு கட்டிட வரி, குடிநீர் வரி, வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி என பல கோடிக்கு மேல் வரி செலுத்தி வருவதாகவும் தங்களுக்கு அடிப்படை வசதி கூட செய்து தர வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இப்பகுதியில் சாலையில் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தங்கள் நிறுவனங்களுக்கு பொருட்களை ஏற்றி செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் மேலும் ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது சாலையில் உள்ள பள்ளத்தினால் விபத்தில் ஏற்பட்டு வருவதாகவும் இரவு நேரங்களில் பெண்கள் வீட்டிற்கு செல்ல சாலைகளில் மின்விளக்கு இல்லாததால் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் இரவு நேரங்களில் வழிப்பறி போன்ற சம்பவங்கள் ஏற்படுவதற்கும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
மேலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர் மண்டல அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் உடனடியாக தமிழக அரசு தங்கள் பகுதியில் உள்ள 25 தெருக்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்றும் சாலைகளில் மின்விளக்கு அமைத்து தரவேண்டியும் கோரிக்கை விடுகின்றனர். சாலைகளில் மின்விளக்கு அமைத்து தர வேண்டிய கோரிக்கை விடுகின்றனர்.
தங்களிடம் இருந்து வருகை மட்டும் பெற்றுக்கொண்டு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் காலதாமதம் அம்பத்தூர் மண்டல் அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் மழைக்காலங்களில் மிகப்பெரிய ஒரு சிரமத்தை சந்திக்க கூடிய சூழ்நிலை உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மழைநீர் வடிகால்வை சரிவர அமைக்கப்படாததால் ஒவ்வொரு மழைக்கும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே ஒப்பந்த பணி கால தாமத அபராத தொகையை குறைக்க லஞ்சம் வாங்கிய அதிகாரி – கைது