HomeBreaking News'ரெட்ரோ' நெக்ஸ்ட் சிங்கிள் லோடிங்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

‘ரெட்ரோ’ நெக்ஸ்ட் சிங்கிள் லோடிங்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

ரெட்ரோ படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.'ரெட்ரோ' நெக்ஸ்ட் சிங்கிள் லோடிங்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூர்யாவின் 44 வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது வருகின்ற மே 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. கங்குவா படத்திற்குப் பிறகு வெளியாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் இந்த படத்தில் இருந்து வெளியான அடுத்தடுத்த பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. 'ரெட்ரோ' நெக்ஸ்ட் சிங்கிள் லோடிங்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!அதிலும் சந்தோஷ் நாராயணனின் குரலில் சூர்யாவும், பூஜா ஹெக்டேவும் நடனமாடி இருந்த கனிமா பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் நாளை (ஏப்ரல் 12) வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த பாடல் நடிகை ஸ்ரேயா நடனம் பாடிய பாடலாக இருக்கலாம் என்றும் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.'ரெட்ரோ' நெக்ஸ்ட் சிங்கிள் லோடிங்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரெட்ரோ படத்தை சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ