சந்தானம் நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தார். தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமானது ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1, 2 மற்றும் டிடி ரிட்டன்ஸ் ஆகிய படங்களை போல் ஹாரர்- காமெடி ஜானரில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்க நடிகர் ஆர்யா இப்படத்தை தயாரித்துள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து யாஷிகா ஆனந்த், செல்வராகவன், கௌதம் மேனன், மொட்ட ராஜேந்திரன், கஸ்தூரி, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஆஃப்ரோ இந்த படத்திற்கு இசையமைக்க தீபக் குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி வருகின்றன.
அதேசமயம் இப்படம் 2025 மே மாதம் திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படம் மே 16 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இப்படத்திலிருந்து டீசர், ட்ரெய்லர் ஆகியவை இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவத்துக்கு தேதி குறிச்சாச்சு….. சந்தானம் நடிக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் புதிய அறிவிப்பு!
-
- Advertisement -