நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை வழக்கில் தேடப்பட்ட நபரை, துப்பாக்கிச்சூடு நடத்திப் பிடித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் பிஜிலி (60) திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக (எஸ்.ஐ.) பணியாற்றிய இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற இவர், திருநெல்வேலி முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்திருக்கிறார்.
ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வந்துள்ள அவர் நேற்று (மார்ச் 18) அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு, தெற்கு மவுன்ட் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்தில் திரண்ட அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இடப் பிரச்சினை காரணமாக தான் இந்த கொலை நடைபெற்றுள்ளது எனவும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இச்சம்பவத்தை தடுத்திருக்கலாம் என்றும் குற்றம் சுமத்தி உள்ளனர்.
அங்கு தகவலறிந்து வந்த காவல் துணை ஆணையர் கீதா மற்றும் போலீஸார், கொலையாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. மேலும், ஜாகிர் உசேன் பிலிஜியின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது “நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக ஜாகிர் உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஜாகிர் உசேன் பிஜிலி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டு, டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து இந்தக் கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்தனர்.
பின்னர் இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்ட கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர், திருநெல்வேலி 4-வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இதனிடையே, கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜாகிர் உசேன் பிஜிலி வீடியோ பதிவு ஒன்றினை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தான் கொலை செய்யப்படலாம் என்றும், இந்தக் கொலைக்கு மூலகாரணம் நெல்லை டவன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணனும், நெல்லை மாநகர உதவி ஆணையர் விஜயகுமாரும்தான் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், “நெல்லை டவுன் தொட்டி பாலம் தெரு அருகேயுள்ள எனது 36 சென்ட் இடத்தை அபகரிக்க முயன்றதை தடுத்தேன். அந்த நபர் கொடுத்த பொய் புகாரின் பேரில், நெல்லை டவுன் போலீஸார் பிசிஆர் வழக்கு பதிவு செய்தது வெட்கக்கேடு என்றும் பட்டியலின இளைஞர், மதம் மாறிய பின்னர், பிசிஆர் பிரிவில் எவ்வாறு வழக்கு பதிவு செய்ய முடியும்? என்று ஜாகீர் உசேன் காணொலியில் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தக் கொலை சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைப் பெற்றுத் தரவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை வழக்கில் தேடப்பட்ட நபரை, துப்பாக்கிச்சூடு நடத்திப் பிடித்துள்ளனர். ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த முகமது தெளபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை சுற்றி வளைத்துப் பிடிக்கும் போது, போலீசாரை அவர் அரிவாளால் வெட்டியபோது துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.
நீயா? நானா? வரவேக்கூடாது! டெல்லியில் போட்டுக் கொடுத்த சங்கி! உடைத்துப்பேசும் ஜீவசகாப்தன்!