HomeBreaking Newsதயாரிப்பாளராக மாறிய சிம்பு.... தீப்பொறிப் பறக்கும் 'STR 50' பட அறிவிப்பு!

தயாரிப்பாளராக மாறிய சிம்பு…. தீப்பொறிப் பறக்கும் ‘STR 50’ பட அறிவிப்பு!

-

- Advertisement -

சிம்புவின் 50வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.தயாரிப்பாளராக மாறிய சிம்பு.... தீப்பொறிப் பறக்கும் 'STR 50' பட அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இப்படம் 2025 ஜூன் 5 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதே சமயம் சிம்பு தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார் சிம்பு. அதை தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் சிம்பு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். தயாரிப்பாளராக மாறிய சிம்பு.... தீப்பொறிப் பறக்கும் 'STR 50' பட அறிவிப்பு!அதன்படி இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. ஆனால் இப்படம் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. எனவே இந்த படம் கைவிடப்பட்டதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்தன.

இந்நிலையில் STR 48 என்று தலைப்பு வைக்கப்பட்ட இந்த படமானது தற்போது STR 50 என்று மாறி உள்ளது. சிம்பு, தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை நடிகர் சிம்புவே தனது அட்மேன் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார். தற்போது இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வெளியான அறிவிப்பு போஸ்டரில் சிம்பு, தனது சிறுவயது தோற்றத்தில் கையில் தீப்பந்தத்துடன் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போவதாகவும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இனிவரும் நாட்களில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர் சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில், “இறைவனுக்கு நன்றி!.. நான் ஒரு தயாரிப்பாளராக புதிய பயணத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் தேசிங்கு பெரியசாமிக்குமான கனவு திட்டமான என்னுடைய ஐம்பதாவது திட்டத்துடன் இதை தொடங்க சிறந்த வழி எதுவும் இல்லை. இந்த புதிய முயற்சிக்காக உற்சாகமாக, உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். நீங்க இல்லாம நான் இல்லை” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

MUST READ