HomeBreaking Newsநாளை வெளியாகும் 'SK 25' படத்தின் அறிவிப்பு டீசர் .... புதிய போஸ்டருடன் அறிவிப்பு!

நாளை வெளியாகும் ‘SK 25’ படத்தின் அறிவிப்பு டீசர் …. புதிய போஸ்டருடன் அறிவிப்பு!

-

- Advertisement -

SK 25 படத்தின் அறிவிப்பு டீசர் நாளை வெளியாகும் என புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை வெளியாகும் 'SK 25' படத்தின் அறிவிப்பு டீசர் .... புதிய போஸ்டருடன் அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கிட்டத்தட்ட ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது. இதற்கிடையில் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார் சிவகார்த்திகேயன். அதன்படி தற்காலிகமாக SK 25 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாளை வெளியாகும் 'SK 25' படத்தின் அறிவிப்பு டீசர் .... புதிய போஸ்டருடன் அறிவிப்பு!கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் இந்த படத்திற்கு பராசக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு டீசர் நாளை (ஜனவரி 28) மாலை 4 மணி அளவில் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

MUST READ