சூரி நடிக்கும் மாமன் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.நகைச்சுவை நடிகரான சூரி தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் விடுதலை பாகம் 1 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அதைத் தொடர்ந்து கருடன், விடுதலை 2 என பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மதிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் சூரி. இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சூரியுடன் இணைந்து ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்ட நிலையில் நேற்று (ஜனவரி 16) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
Get ready for the #Maaman first look unveiling today at 5 PM#MaamanFirstLook@p_santh @HeshamAWmusic @kumarkarupannan @larkstudios1 @AishuL_ @DKP_DOP @g_durairaj @thecutsmaker @MaheshMathewMMS @dineshashok_13 @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/DoRi9gXv5g
— Actor Soori (@sooriofficial) January 17, 2025
ஆனால் நேற்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவில்லை. இந்நிலையில் படக்குழு இன்று (ஜனவரி 17) மாலை 5 மணி அளவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.