சுந்தர்.சி யின் கேங்கர்ஸ் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் சுந்தர்.சி. அந்த வகையில் இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார். தற்போது இவரது இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இது தவிர கார்த்தி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார் சுந்தர்.சி. காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் கேத்தரின் தெரசா, வாணி போஜன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். சுந்தர்.சி, வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளன. எனவே வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி திரைக்கு வர முழு விச்சில் தயாராகி வரும் இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்க்கின்றன. ஏற்கனவே கேத்தரின் தெரசா நடனமாடிய குப்பன் பாடல் வெளியான நிலையில் தற்போது என் வான்மதியே எனும் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த பாடல் சுந்தர்.சி, வாணி போஜன் ஆகிய இருவருக்கமான காதல் பாடலாக வெளிவந்துள்ளது. இந்த பாடல்வரிகளை லவரதன் எழுதியுள்ள நிலையில் மதுஸ்ரீ, அஸ்வத் அஜித் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் இணையத்திலும் வைரலாகி வருகிறது.