பள்ளி முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை இராயபுரம் சூரிய நாராயண தெரு பகுதியில் இயங்கி வரும்கலைமகள் வித்தியாலயா பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
சென்னை ராயபுரம் கலைமகள் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முதல்வர் சாரதா சுப்பையாவை கண்டித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிதாக பள்ளியில் முதல்வராக வந்துள்ள சாரதா சுப்பையா என்பவர் வகுப்பு ஆசிரியர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசுவதும் வகுப்பறையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்களை நின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும் என்றும்
காலை உணவு கூட சாப்பிடக்கூடாது என்று அவர் கூறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாணவர்களையும் தரக்குறைவாக பேசுவதாகவும் , மாணவர்களின் பெற்றோர் வந்தால் அவர்களிடமும் தரக்குறைவாக பேசுவதாகவும்
தெரியவருகிறது. குழந்தைகள் தினத்தன்று கூட ஒரு சில மாணவர்கள் பள்ளி சீருடை இல்லாமல் வந்ததாகவும் அவர்களை தரக்குறைவாக முதல்வர் பேசியதாகவும் கூறி உள்ளனர்.
இதனையடுத்து தற்போது பள்ளி மாணவர்கள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் தரக்குறைவாக பள்ளி முதல்வர் பேசுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து போலீஸார் பள்ளி வாளகத்திற்கு வந்து விசாரித்து பேச்சு வார்தை நடத்தி வருகின்றனர்.
விஜய் கட்சி தவெகவுடன் அதிமுக கூட்டணி என்பது ஊடகங்களின் கற்பனை – முன்னாள் அமைச்சர் பொன்னையன்