HomeBreaking Newsரயில் உதவி ஓட்டுனர் தேர்வுக்கான தேர்வு மையம் தெலுங்கானாவில் – தமிழ்நாடு தேர்வர்கள் அதிர்ச்சி

ரயில் உதவி ஓட்டுனர் தேர்வுக்கான தேர்வு மையம் தெலுங்கானாவில் – தமிழ்நாடு தேர்வர்கள் அதிர்ச்சி

-

- Advertisement -

ரயில் உதவி ஓட்டுனர் தேர்வுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்வர்கள் புகார் தெரிவித்துவருகின்றனர்.ரயில் உதவி ஓட்டுனர் தேர்வுக்கான தேர்வு மையம் தெலுங்கானாவில் – தமிழ்நாடு தேர்வர்கள் அதிர்ச்சி

ரயில் என்ஜின் உதவி ஓட்டுனர் பணிக்கான தேர்வுக்காக தமிழ்நாட்டில் 493 காலியிடங்கள் 2024 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து 10,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டாம் கட்ட கணினி முறை (CBT 2) தேர்வு மார்ச் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால், பெரும்பாலான தமிழ்நாடு தேர்வர்களுக்குத் தேர்வு மையங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என்பதே தேர்வர்களின் கோரிக்கை. ஆனால், தேர்வு மையங்கள் வெளியூர் மாநிலங்களில் அமைக்கப்பட்டதால், தமிழக தேர்வர்கள் கடும் அவதிகுள்ளாகி உள்ளனர். குறிப்பாக, இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால், ரயில் டிக்கெட் பெறுவதிலும் பயண ஏற்பாடுகளில் சிரமம் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாலிடெக்னிக் தேர்ச்சி பெறாதோர்க்கு சிறப்பு தேர்வு – கோவி. செழியன் அறிவிப்பு

MUST READ