குட் பேட் அக்லி படக்குழு திரிஷாவின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. எனவே இப்படமானது 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி தீனா படத்தில் இடம் பெற்ற வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடல் இந்த படத்தில் ரீமேக் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
Welcome to the world of GBU Maamey @trishtrashers mam as Ramya 💥 See you all on April 10 th ❤️🙏🏻 #AjithKumar sir @MythriOfficial @SureshChandraa sir ❤️🙏🏻 pic.twitter.com/SoXYXp2qUJ
— Adhik Ravichandran (@Adhikravi) February 22, 2025
அடுத்தது ஜிவி பிரகாஷும், இப்படத்தின் இசை வெறித்தனமாக இருக்கும் என தொடர்ந்து அப்டேட் கொடுத்து வருகிறார். இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் குட் பேட் அக்லி படக்குழு நடிகை திரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகை திரிஷா இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.