HomeBreaking Newsவிஜய் சேதுபதியின் 'ஏஸ்' ....ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ ….ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!

-

- Advertisement -

விஜய் சேதுபதியின் ஏஸ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது.விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ....ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!

நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதே சமயம் ட்ரெயின், காந்தி டாக்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. இது தவிர பெயரிடப்படாத சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் எனும் திரைப்படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கத்தில் ஏஸ் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ருக்மினி வசந்த், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 7CS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜஸ்டின் பிரபாகரன் இதற்கு இசையமைத்திருக்கிறார். விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ....ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து படத்திலிருந்து முன்னோட்ட வீடியோக்களும், போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகின்ற மே மாதம் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

MUST READ