HomeBreaking Newsவிக்ரம் பிரபுவின் 'லவ் மேரேஜ்' பட முதல் பாடல் இணையத்தில் வைரல்!

விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ பட முதல் பாடல் இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் பட முதல் பாடல் வெளியாகி உள்ளது.விக்ரம் பிரபுவின் 'லவ் மேரேஜ்' பட முதல் பாடல் இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வரும் நடிகர் பிரபுவின் மகன் தான் விக்ரம் பிரபு என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்ற விக்ரம் பிரபு, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது இவர் தெலுங்கில் அறிமுகமாகி அனுஷ்காவுடன் இணைந்து காட்டி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் தமிழில், லவ் மேரேஜ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார். மேலும் ரமேஷ் திலக், மீனாட்சி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். நடிகர் சத்யராஜ் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை சண்முக பிரியன் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபர் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படமானது 2025 கோடையில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‘கல்யாண கலவரம்’ எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை ஷான் ரோல்டன் எழுதி, பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ