விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விக்ரம் கடைசியாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம், சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62 ஆவது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு வீர தீர சூரன் பாகம் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சித்திக், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். தேனி ஈஸ்வர் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இயக்குனர் அருண்குமாரின் மற்ற படங்களை போல் இந்த படத்திலும் ஸ்ட்ராங்கான கன்டென்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இப்படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கல்லூரும் எனும் முதல் பாடல் நாளை (ஜனவரி 11) வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.