HomeDiwali Specialசென்னையில் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

சென்னையில் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

-

சென்னையில் தீபவாளி பண்டிகையை ஒட்டி அதிகாலை முதலே பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் விமரிசையாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து,  நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, குடும்பத்தினருடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

தமிழக அரசு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பாதுகாப்பாக பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள சூழலில், காலை 6 மணிக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 தீயணைப்பு வாகனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தீபவாளி பண்டிகையை ஒட்டி அதிகாலை முதலே இறைச்சி கடைகளில் ஆடு, கோழி கறிகளை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர். இதனால் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.

 

MUST READ