HomeGeneralஅரசுப்பள்ளி நமது பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

அரசுப்பள்ளி நமது பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

-

- Advertisement -

அரசுபள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்பதை நிருபிப்போம்; மாணவர் அபிஷேக்கின் சாதனையை பாராட்டுவோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது X வலைத்தளத்தில் பதிவிட்டு அரசு பள்ளி மாணவரை உற்சாகப்படுத்தி உள்ளார்.

சேலம் மாவட்டம் இராமநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் அபிஷேக் பேட்டரியால் இயங்கும் மிதிவண்டியை வடிவமைத்து பள்ளிக்கு சென்று வருகின்றார். இது குறித்த செய்திகள் நேற்று ஊடகங்களில் வைரலானது. மாணவர் அபிஷேக் பற்றியும் அவர் வடிவமைத்த பேட்டரி மிதிவண்டி பற்றியும் பல்வேறு ஊடகங்களில் காணொளிகள் வெளியிட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது X பக்கத்தில் மாணவர் அபிஷேக் அவர்களை பாராட்டி “அரசு பள்ளி மாணவர்களின் சாதனைக்கு எடுத்துக்காட்டாக திகழும் அபிஷேக் முயற்சிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து சாதனைகள் படைப்போம். அரசுப் பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம்” எனப் பதிவிட்டார். தொடர்ந்து மாணவர் அபிஷேக்கிடம் உரையாடி வாழ்த்து தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஆணையிட்டார். சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாணவர் அபிஷேக் அவர்களின் இல்லம் சென்று அலைபேசி வழியாக அமைச்சரிடம் உரையாட வைத்தார்கள். “பெருமையாக இருக்கின்றது. அறிவியலின் ஆர்வம் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக நீங்கள் திகழ்கின்றீர்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக ஆலோசனைகள் தெரிவித்தால் அதை நடைமுறை செய்யலாம்” எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அபிஷேக்கிடம் வாழ்த்துகள் தெரிவித்தார்.

MUST READ