HomeGeneralஒரே நாளில் நடிகர் விஜய், அஜித் படங்கள்- ரசிகர்கள் கொண்டாட்டம்

ஒரே நாளில் நடிகர் விஜய், அஜித் படங்கள்- ரசிகர்கள் கொண்டாட்டம்

-

ஒரே நாளில் திரையில் மோதப்போகும் நடிகர் விஜய் அஜித்தின் திரைப்படங்கள்.

வாரிசு, துணிவு படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்பால் விஜய், அஜித்  ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கடந்த 2014 ஜனவரி மாதம் 10 ஆம் தேதி ஒரே நாளில் நடிகர் விஜயின் ஜில்லாவும், நடிகர் அஜித்தின் வீரம் திரைப்படமும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரே நாளில் அதே கதாநாயகர்களின் படங்கள் மோத உள்ளது.

வம்சி இயக்கத்தில், நடிகர் விஜய் “வாரிசு” படத்திலும், எச்.வினோத் இயக்கத்தில்  நடிகர் அஜித் “துணிவு”படத்திலும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தொடங்கும்போதே இந்த இரண்டு படங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு வாரிசு, துணிவு திரைக்கு வர உள்ளதை படக்குழு ஏற்கனவே உறுதிப்படுத்திய நிலையில்  வெளியீட்டு தேதி குறித்து எந்த அப்டேட்டையும் கொடுக்காமல் இருந்தது.

இந்நிலையில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தேதியை அடுத்தடுத்து அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

விஜயின் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை ஐந்து மணிக்கு வெளியான நிலையில் அதனை தொடர்ந்து எதிர்பாராத அறிவிப்பாக மாலை 6:30 மணிக்கு  நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் ஜனவரி 11  தேதி வெளியாகும் என்ற    அதிகாரப்பூர்வ தேதியை அறிவித்து ரசிகர்களை சூடு ஏற்றியது. இந்த சூடு அடங்குவதற்குள் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டு தேதியையும் நள்ளிரவு 12 மணிக்கு அதே ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 6 நாட்களில் வெளியாகியுள்ள இரண்டு முன்னணி நடிகர்கள் படத்திற்காக ரசிகர்கள் தற்போதிலிருந்தே கொண்டாத்தை தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, இரண்டு படங்களின் அடுத்தடுத்த அறிவிப்பால் சமூக வலைதளங்கள் முழுவதும் “வாரிசு” “துணிவு” என்ற வார்த்தைகளே வலம் வருகிறது. மேலும் சமூக வலைதளங்கள் துணிவு, வாரிசு கொண்டாடங்களால் ஸ்தம்பித்து உள்ளது என்றே சொல்லலாம்.

MUST READ