சென்னை திருவொற்றியூரில் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் இரண்டாவது நாளாக சாரல் மழையிலும் குடை பிடித்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
திருவொற்றியூரில் 2000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ ஸ்வாமி வடிவுடை அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஒரு முறை மட்டுமே ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் திறக்கும் விழா நடைபெறுகிறது
வாசுகி என்ற பாம்பிற்கு காட்சி கொடுப்பதற்காக சுயம்பு புற்று வடிவில் தோன்றிய ஆதிபுரீஸ்வரருக்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தைலாபிஷேகம் நடைபெறுகிறது
தியாகராஜர் கோவிலில் ஆண்டு முழுவதும் மூலவர் புற்று வடிவிலான ஆதிபுரீஸ்வரர்க்கு நாக கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்
ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டிருக்கும் தங்க கவசம் திறக்கப்பட்டு 3 நாட்களுக்கு மட்டும் கவசமின்றி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
இந்த ஆண்டு கார்த்திகை பவுர்ணமி தினத்தையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டுள்ள கவசம் திறக்கப்பட்டு மகா அபிஷேகம் மற்றும் புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைப்பெற்றது.
இரண்டாவது நாளான இன்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சாரல் மழையும் பொருட்படுத்தாது குடை பிடித்தபடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இரவு 8 மணிவரை ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும் என்பதனால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
கோவில் நுழைவாயில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை சன்னதி தெருவில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததால் தேரடி சாலை முழுவதுமே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது