HomeGeneralதனுஷின் 50-வது படத்தின் போஸ்டர் வெளியீடு

தனுஷின் 50-வது படத்தின் போஸ்டர் வெளியீடு

-

- Advertisement -

தனுஷின் 50-வது படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் வித்தியாசமான போஸ்டர் உடன் அறிவிப்பு.

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ். அடுத்தடுத்து பல படங்களை அறிவித்து வரும் சன் பிக்சர்ஸ் தற்போது தனுஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனுஷின் 50-வது படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும், சிறப்பான வகையில் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் அதிகமான வீடுகளும் புகைமண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது.

இந்த படத்தின் இயக்குனர், கதாநாயகி, வில்லன் உள்ளிட்ட அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

விரைவில் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்படும். தற்பொழுது கேப்டன் மில்லர் படத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

கோலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட், ஹாலிவுட் என தன் நடிப்பின் எல்லைகளை அகலப்படுத்தி வருகிறார்.

தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கில் கால் பதிக்கிறார். அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.

இதனிடையே வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது வார்த்தை படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

MUST READ