24H துபாய் 2025 மற்றும் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப் போர்ஷே 992 GT3 கோப்பை வகுப்பில் பங்கேற்க உள்ளார் நடிகர் அஜித் குமார்.
இதனையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் அஜித் குமாருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து‘நமது முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நமது திராவிட மாதிரி அரசு செயல்படுத்தும் திட்டங்கள் உட்பட பல்வேறு முன்முயற்சிகளை ஆதரித்து, அங்கீகரித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஒன்றிணைந்து செயல்ப்டுவோம்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
விஜய் எதிர்ப்பு நிலையையொட்டி உதயநிதி ஸ்டாலின் இப்போது வாழ்த்து தெரிவித்து இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராரஜன், ‘‘விஜய்யை கோபப்படுத்த, அஜித்திற்கு உதயநிதி வாழ்த்து சொல்கிறாரா என தெரியவில்லை’ என தெரிவித்தார்.
‘‘இன்னைக்கு உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார். விஜய்யை கோபப்படுத்த, அஜித்திற்கு உதயநிதி வாழ்த்து சொல்கிறாரா என தெரியவில்லை. எனத் தெரிவித்துள்ளார்.