HomeGeneralபட்டா மாறுதல், புதிய பட்டா வழங்கும் பணி தீவிரம்; வருவாய் துறை அமைச்சர் தகவல்

பட்டா மாறுதல், புதிய பட்டா வழங்கும் பணி தீவிரம்; வருவாய் துறை அமைச்சர் தகவல்

-

- Advertisement -

மாநிலம் முழுவதும் பட்டா வழங்கும் பணியையும், நிலத்தை சர்வே செய்யும் பணியையும் விரைவு படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள நில அளவைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், புதிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நிலையத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,வருவாய் துறையில் பட்டா வழங்கும் பணியையும் சர்வே செய்யும் பணியையும் விரைவு படுத்த வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் உத்தரவையொட்டி, புதிய மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய மையம் தொடங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், ஏற்கனவே 50 பேர் பயிற்சி எடுத்துக் கொள்ளும் வகையில் உள்ள நிலைத்தில், இப்போது கூடுதலாக 50 பேர் பயிற்சி பெற முடியும் என்றும் ஒருவருக்கு 8 மாதங்கள் பயிற்சி இருக்கும் என்றும் கூறினார்.

30 முதல் 40 நாட்களில் ஆன்லைன் பட்டாக்கள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலவச பட்டா மாறுதல் முகாம்கள் குறித்த கேள்விக்கு, இதற்கான முகாம், உங்களைத் தேடி முதலமைச்சர் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருவதாகவும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பதிலளித்தார். பிரச்சினை இல்லாமல் இருந்தால் உடனடியாக பட்டா வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவ மழை ஏற்பாடுகள் குறித்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.,
வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பை விட அதிக மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால்
அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகிளில் கவனமாக செலுத்தி வருவதாக கூறினார்.

கடந்த முறை வடகிழக்கு பருவமழை எந்த பகுதிகளில் பாதிப்பை அதிகம் ஏற்படுத்தியுள்ளது என்பதை கவனித்து, செயல்பட்டு வருவதாக அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் மேலும் கூறியதாவது- நீர் அதிகம் தேங்கும் இடங்களுக்கு படகுகளை அந்த நேரத்தில் அல்லாமல், முன்னெச்சரிக்கையாகவே அனுப்பி வைக்கப்படும் என்று, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். விளக்கினார்.

பால் பவுடர் மற்றும் உணவுப்பொருட்களை முன்கூட்டியே தயார் செய்து வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும்
கடந்த முறை இருந்த சிறு சிறு குறைகள், நிவர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.

பாதிப்பு இருக்கும் பகுதிகளுக்கு மீட்பு படைகளை அனுப்ப தயாராக இருப்பதாக கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தமிழக அரசு அனைத்து நிலைகளுக்கும் தயாராக உள்ளதென நம்பிக்கை தெரிவித்தார்.

மரங்கள் விழுவதை உடனடியாக அப்புறப்படுத்தவும் கால்நடைகளை பாதுகாக்கவும் நீர்நிலைகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்…

MUST READ