HomeGeneralஎங்கும் ஸ்மார்ட் ... எதிலும் ஸ்மார்ட் ... இதிலும் ஸ்மார்ட் ...!!! புத்தாண்டின் புது வரவு...

எங்கும் ஸ்மார்ட் … எதிலும் ஸ்மார்ட் … இதிலும் ஸ்மார்ட் …!!! புத்தாண்டின் புது வரவு – “ஸ்மார்ட் டைரிஸ்” 📕

-

- Advertisement -

விற்பனைக்கு வந்திருக்கும் பவர் பேங்க், வையர்லஸ் சார்ஜ், பெண்டிரைவ் உள்ளடக்கிய ஸ்மார்ட் டைரீஸ்

எங்கும் ஸ்மார்ட் ... எதிலும் ஸ்மார்ட் ... இதிலும் ஸ்மார்ட் ...!!! புத்தாண்டின் புது வரவு - "ஸ்மார்ட் டைரிஸ்" 📕

நவீன தொழில்நுட்பம் உலகை ஆட்கொண்ட நிலையில், “ஸ்மார்ட்” என்ற பெயரில் ஏராளமான விடயங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், புத்தாண்டின் புது வரவாக வந்திருக்கிறது “ஸ்மார்ட் டைரிஸ்” 📕. கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மெஜஸ்டிக் என்ற புத்தகக் கடையில், இந்த டைரியை அறிமுகப்படுத்தி விற்பனையில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றனர்.

எங்கும் ஸ்மார்ட் ... எதிலும் ஸ்மார்ட் ... இதிலும் ஸ்மார்ட் ...!!! புத்தாண்டின் புது வரவு - "ஸ்மார்ட் டைரிஸ்" 📕

பொதுவாக டைரி என்பது அன்றாட நிகழ்வுகளையும், எதிர்கால நிகழ்வுகளையும் குறிப்பெடுத்துக் கொள்ளும் ஒரு ஆவண பதிவேடாகவே இருக்கின்றன. டிஜிட்டல் யுகமானாலும், இன்றளவும் டைரி எழுதும் 📔✏️ பழக்கம் பலருக்கும் இருக்கின்றன. அதனை குறிப்புகளை புரட்டிப் போடும் பொழுது, “டைம் ட்ராவலர்” என்ற அடிப்படையில் கடந்த கால நினைவுகள் கண்ணெதிரே தோன்றுவது, அவ்வளவு ஒரு அலாதியமான பிரியத்துக்கு உண்டானதாகவே பார்க்கின்றனர்.

எங்கும் ஸ்மார்ட் ... எதிலும் ஸ்மார்ட் ... இதிலும் ஸ்மார்ட் ...!!! புத்தாண்டின் புது வரவு - "ஸ்மார்ட் டைரிஸ்" 📕

இந்த நிலையில், டைரியின் பயன்பாடு வருடம் தோறும் அதிகரித்திருக்கும் நிலையில், அன்றாட மக்கள் பயன்படுத்தும் பல்வேறு இதர அம்சங்களையும் அதனுடன் நடப்பு ஆண்டிலே இணைத்து விற்பனையில் இருக்கின்றனர். அதன் அடிப்படையில், வயர்லெஸ் சார்ஜ் போர்ட், மூன்று விதமான யூ.எஸ்.பி. கேபிள்கள், பென்டிரைவ் உள்ளடக்கிய கேட்ஜட் ஸ்மார்ட் அம்சங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

எங்கும் ஸ்மார்ட் ... எதிலும் ஸ்மார்ட் ... இதிலும் ஸ்மார்ட் ...!!! புத்தாண்டின் புது வரவு - "ஸ்மார்ட் டைரிஸ்" 📕எங்கும் ஸ்மார்ட் ... எதிலும் ஸ்மார்ட் ... இதிலும் ஸ்மார்ட் ...!!! புத்தாண்டின் புது வரவு - "ஸ்மார்ட் டைரிஸ்" 📕

இதில் பொருத்தப்பட்டிருக்கும் பவர் பேங்க் இன் வாயிலாக இரண்டு முறை செல்போன்களுக்கு சார்ஜ் போட முடியும். ஆப்பிள் போன், நார்மல் போன் மற்றும் சி டைப் ஃபோன்களுக்கு செரிவூட்டும் செய்யும் வசதியும் பொருத்தப்பட்டிருக்கின்றன. USB அடாப்டர்கள் இதனுடன் பொருத்தப்பட்டு இருப்பதனால் டைரியில் உள்ள பேட்டரிக்கு வழக்கமான போன் மௌண்டை பயன்படுத்தி டைரிக்கு சார்ஜ் போடும் வசதியும் செய்யப்பட்டிருக்கின்றன.

எங்கும் ஸ்மார்ட் ... எதிலும் ஸ்மார்ட் ... இதிலும் ஸ்மார்ட் ...!!! புத்தாண்டின் புது வரவு - "ஸ்மார்ட் டைரிஸ்" 📕

இந்த டைரீக்களை ஸ்மார்ட் டைரிக்களாக சந்தையில் அறிமுகப்படுத்தி விற்று வருகின்றனர். இதனை பயன்படுத்துபவர்கள் செல்போன் செரி ஊட்டுவதற்கு (சார்ஜ் போடுதல்) தனியாக செரிவூட்டியோ (சார்ஜரோ) அல்லது பவர் பேங்க்கயோ கொண்டு செல்லும் நிலை ஏற்படாது. அதேபோன்று ஆவணங்களை பதிவேற்றம் செய்யப்படும் ஹார்ட் டிஸ்க்கள், பென்டிரைவுகளை தனியாக எடுத்துச் செல்லும் நிலையும் ஏற்படாது. எந்த பொருளையும் மறந்து விட்டு செல்லும் நிலை இன்றி, எதார்த்தமாகவே அனைத்து கேட்ஜ்களுடன் செல்லும் வசதி ஏற்பட்டிருக்கின்றன. அத்தோடு மட்டுமின்றி இதுபோன்ற ஸ்மார்ட் டைரிகள் ஆவணங்கள் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்துவதால், கார்ப்பரேட் கம்பெனிகளின் மீட்டிங்கிற்கு பெருமளவில் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

நினைவுகளை பொத்தி பாதுகாக்கும் டைரிக்களில் பென்டிரைவ் உள்ளிட்ட மெமரி அம்சங்களுடன் அறிமுகமான “ஸ்மார்ட் டைரிஸ்” “ஸ்மார்ட்” என்றால் மிகையல்ல.

‘விடாமுயற்சி’ படத்திலிருந்து ‘Sawadeeka’ பாடல் வெளியீடு…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

MUST READ