பொங்கல் பண்டிகை ஒட்டி கடந்த 11ஆம் தேதி வெளியானது விஜய் நடித்த வாரிசு திரைப்படம். இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கியிருந்தார்.
இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா நடித்திருந்தார். சரத்குமார், பிரபு, ஷாம், எஸ்.ஜே.சூர்யா ஜெயசுதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தை தில்ராஜூ தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் தெலுங்கு பதிவான ”வாரசூடு” என்ற பெயரில் ஆந்திரா, தெலுங்கானாவில் இரண்டு நாட்கள் தாமதமாக ஜனவரி 13ஆம் தேதி திரைக்கு வந்தது.
இந்தியிலும் வாரிசு திரைப்படம் வெளியானது. ஆனால் இந்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை படம் தரவில்லை.
வாரிசு திரைப்படம் தொடக்கத்தில் இருந்தே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. பொங்கல் பண்டிகை காரணமாக தொடர் 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது இப்படத்தை பார்க்க கடந்த ஐந்து நாட்களில் அதிகமானோர் வந்திருந்தனர்.
150 கோடி இந்த ஐந்து நாட்களில் மட்டும் இப்படம் வசூலித்து இருந்தது. இந்த நிலையில் வாரிசு படம் உலக அளவில் கடந்த ஏழு நாட்களில் ரூபாய் 210 கோடி வசூலித்து இருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ரூபாய் 20 கோடிக்கு மேல் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வசூலித்திருப்பதாகவும், வெளிநாடுகளில் 63 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும், கேரளா, கர்நாடகா மராட்டியத்திலும், நல்ல வசூலை இப்படம் தந்துள்ளதாகவும் பட நிறுவனம் அறிவித்துள்ளது.