தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக தான் இருக்கிறது தென் மாவட்டங்களில் தொழில் வளம் குறைவாக இருப்பதே அதிக கொலைகள் நடப்பதற்கு காரணம் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி
திருநெல்வேலியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாருக்கு தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பொறுப்பாளர்களை அறிவிப்பதற்காக இங்கு வந்து இருக்கிறேன்.சென்னை மழையில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது பல மாநிலங்களில் முழுமையான அடிப்படையான வசதிகளை செய்ய முடியாமல் தத்தளித்துக் இருக்கிறார்கள்.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் குறை கூறவில்லை என்றால் நிறைவாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஒருவரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை நம்மளே உதவி செய்ய வேண்டும் என்றால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத நிலை உள்ளது.
தொலைதொடர்பு துண்டிப்பு, மின்சாரத் துண்டிப்பு இந்த சூழல் மிகப்பெரிய பாதிப்பு மற்றும் இழப்பை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் இது போன்ற நிலைமை தொடர்ந்து வராமல் எப்படி தடுக்க வேண்டும் என்பதை நடவடிக்கை எடுக்க வேண்டும்.பேரிடர் மிகப்பெரிய படை உருவாக்க வேண்டும் என அறிக்கை கொடுத்திருக்கிறேன் என சரத்குமார் கூறினார்.
மக்கள் தற்போது காட்டும் எதிர்ப்பை தேர்தலில் காட்ட வேண்டும் ஆனால் அதை மறந்து விடுகிறார்கள் என்றார்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்க கூடிய அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பில்லை. தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் பல்வேறு கொலைகள் நடந்திருக்கிறது மிகவும் வேதனையா இருக்கிறது.
தென் மாநிலங்களில் தொழில் வளத்தை உருவாக்க வேண்டும் வேலையில்லாமல் சுத்திக்கொண்டு இருந்தாலே பல எண்ணங்கள் பல என்ன ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அதை தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றார். இதற்கு அரசு முக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நிற்க வேண்டும் என்றால் உங்கள் விருப்பத்தை நான் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறேன் எனக் கூறியவர் எந்த அரசியல் கட்சியை தலைவர்கள் வந்தாலும் எவ்வளவு இடத்தில் நிற்கிறீர்கள் என்று கேளுங்கள் தெம்பாக நிற்பார்கள் கூட்டணி என்றால் வீக்காகி விடுகிறார்கள் என சரத்குமார் தெரிவித்தார்.