பெரியாரின் கொள்கைகளை முன்னெடுப்பேன் என்ற விஜய் பேச்சிலும் ஒத்துப்போகவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். அப்போது அவரது கொள்கை, அரசியல் எதிரிகள் குறித்தும் பேசினார். இந்நிலையில், நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விஜயின் உரை குறித்து கருத்து தெரிவித்த அவர், “எங்கள் கொள்கையும் த.வெ.க கொள்கையும் ஒத்து0ப்போகவில்லை. காலம் எனக்கு இந்த அரசியல் பணியை கையில் கொடுத்தது. அவருடைய கொள்கை திராவிடமும், தமிழ்த்தேசியம். என் கொள்கை தமிழ் தேசிய அரசியல் அவர் வேறு நாம் வேறு. மொழிக்கொள்கையில் முரண்பாடு உள்ளது. எங்களை பொறுத்தவரையில் கொள்கை மொழி என்பது தமிழ் மட்டும்தான்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்கள் ஆட்சி அதிகாரத்தி பங்கு என விஜய் பேசியிருப்பது விசிக, நாதக உள்ளிட்ட உங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாக பார்க்கலாமா?என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “என் பயணம் என் கால்களை நம்பிதான். அடுத்தவர்கள் கால்களை நம்பி உங்கள் பயணத்தை துவங்காதீர்கள் என்பதை தெளிவாக உணர்ந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என்ற விஜய் பேச்சில் உடன்பாடு இல்லை. பெரியாரின் கொள்கைகளை முன்னெடுப்பேன் என்ற விஜய் பேச்சிலும் ஒத்துப்போகவில்லை. இரண்டிலும் எனக்கு உடன்பாடு இல்லை. இது விஜயின் குழப்பமான கொள்கை முடிவு’’ என சீமான் விமர்சித்துள்ளார்.