Homeசெய்திகள்புதுக்கோட்டைக்கு வரும் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டைக்கு வரும் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை

-

- Advertisement -

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. ஒன்பதாம் நாள் திருவிழாவன்று (13.3.2023) மாலை தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்று நிலைக்கு கொண்டுவருவர்.

அன்றைய தினம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். இதனால் அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்படாது. அந்த விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 1ம் தேதி பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ