Homeசெய்திகள்2 கோடி கடன் தருவதாக மோசடி செய்த வழக்கில் மேலும் 4 போ் - கைது

2 கோடி கடன் தருவதாக மோசடி செய்த வழக்கில் மேலும் 4 போ் – கைது

-

நாட்டறம்பள்ளி அருகே கடன் தருவதாக 2 கோடி போலி  பணத்தை காட்டி ரூ.4 லட்சம் மோசடி! போலீஸ் சீருடை அணிந்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைதான நிலையில் தலைமறைவாக  இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்

2 கோடி கடன் தருவதாக மோசடி செய்த 4 போா் - கைது

கர்நாடகா மாநிலம் சிக்பலாபுரம் மாவட்டம் சிந்தாமணி தாலுகா வெங்கடகிரி கோட்டை பகுதியை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி, இவரது மகன் சதீஷ் (வயது 37). இவர் 16 லாரிகளை வைத்து சிமெண்டு பாரம் ஏற்றி அனுப்பும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய பணம் தேவைப்படுகிறது. இதற்காக வீட்டை அடமானம் வைத்து கடன் பெற பல இடங்களில் பணம் கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய லாரியை ஓட்டும் நீலகண்டன் என்பவரிடம் லோன் ஏதாவது கொடுக்கும் நபரை உங்களுக்கு தெரியுமா என கேட்டுள்ளார்.

அதன் காரணமாக நீலகண்டன் சென்னையை சேர்ந்த தேவராஜ் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.அப்போது தேவராஜிடம் லோன் குறித்து கேட்ட போது ரூ.4 லட்சம் கமிஷன் மற்றும் வீட்டு ஆவணங்கள் கொண்டு வந்தால் ரூ.2 கோடி கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். அதற்கு சதீஷ் சம்மதம் தெரிவித்து பணம் மற்றும் வீட்டு ஆவணங்களை எடுத்துகொண்டு நண்பர்களுடன் சென்னை நோக்கி மூன்று மாதங்களுக்கு முன்பு  காரில் சென்றார். அதேபோல் தேவராஜ் சென்னையிலிருந்து  வந்து கொண்டிருப்பதாகவும்  பணம் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன் நீங்க  நாட்டறம்பள்ளி, நெக்குந்தி சோதனைச்சாவடி அருகே வருமாறு கூறியுள்ளார். அங்கு சென்ற போது தேவராஜ்  தான் கொண்டு வந்த கார் டிக்கியில் ரூ.2 கோடி போலி பணத்தை காட்டியுள்ளார். அதன் பின்னர் தேவராஜ் உடைய காரில் சதீசை அழைத்துக் கொண்டு  பணத்தை இங்க எண்ண வேண்டாம் ஏதாவது பிரச்சினை வரும் ஏதாவது மறைவான இடத்தில் பணத்தை எண்ணிக்கொள்ளலாம் என கூறி அங்கிருந்து காரில் நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பையனப்பள்ளி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தனர்.

2 கோடி கடன் தருவதாக மோசடி செய்த வழக்கில் மேலும் 4 போ் - கைது

ஒரு காரில் 2 பேர் போலீஸ் சீருடையிலும், 3 பேர் டிப் டாப் உடையிலும் நின்றனர். அவர்கள் தேவராஜ்  சென்ற காரை நிறுத்தி சோதனை செய்து பணம் குறித்து விசாரணை செய்வது போன்று நாடகமாடி உள்ளனர். எதாக இருந்தாலும் காவல் நிலையம் வாருங்கள் அங்கு பேசிக்கொள்ளலாம் எனக் கூறி சதீஷ் கொண்டு சென்ற 4 லட்சம் பணத்தை அங்கிருந்து போலி போலிசார் எடுத்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ் பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, போலீஸ் உடையில் வந்து சோதனை செய்து பணத்துடன் சென்றது குறித்து தெரிவித்துள்ளார். அப்போது அங்கு வந்து சோதனை செய்தது போலீசார் இல்லை என்பதும். தாங்கள் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்துள்ளது. பின்னர் இது குறித்து சம்பவம் நடைபெற்ற இடம் நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால்  நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்குமாறு போலீசார் கூறினர்.

#BREAKING தங்கம் வாங்க சரியான நேரம்!! ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,320 குறைவு..

உடனடியாக சதீஷ் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவங்கள் குறித்து புகார் கொடுத்தார். இதன் காரணமாக இது குறித்து இரண்டு தனி படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி  தேவராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நரேஷ்பாபு மற்றும் கோபி ராஜா ஆகியோரை  கைது செய்தனர். மேலும் பண மோசடிக்கு பயன்படுத்திய கார் மற்றும் அவர்களிடம் இருந்து மூன்று லட்சத்தை 75 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர்.

2 கோடி கடன் தருவதாக மோசடி செய்த வழக்கில் மேலும் 4 போ் - கைது

மேலும் போலீஸ் சீருடையில் வந்த  மோசடி ஈடுபட்ட நபர்கள் நான்கு பேரை போலீசார் வலை வீசி தேடி நிலையில் இன்று இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர், காவலர்கள் சீருடை அணிந்து மோசடியில்  ஈடுபட்ட வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்த குமரவேல் (57) மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்த சயத்அலி(37) மற்றும் வேலூர் காட்பாடி பகுதியை சேர்ந்த ஜெகன் (27) மற்றும் வேலூர் காட்பாடியை சேர்ந்த சதீஷ்குமார் (33) ஆகியோர் தனி படையினர் கைது செய்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் நாட்றம்பள்ளி போலீசார் அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய கார் மற்றும் போலியான காவலர்களின்  சீருடைகளை கைப்பற்றினர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் மற்றும் மருத்துவர் ஸ்டிக்கர் இருந்தது குறிப்பிடத்தக்கது…

MUST READ