Homeசெய்திகள்பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!

பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!

-

பொங்கல் பண்டிகை காரணமாக நாளை 13ம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என்ற காரணத்தினால் பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகளும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை நாட்களில் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!

குறிப்பாக சென்னையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பொதுமக்கள் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கு சுமார் 5000 போலீசார் இன்று மாலை முதல் போக்குவரத்து சீர் செய்யும் பணியில்  ஈடுபட உள்ளனர். பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் கடைவீதிகளில் துணிகள் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதும் என்பதால் அத்தகைய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 50,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட காவல் உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

MUST READ