Homeசெய்திகள்ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 7535 காலி பணியிடங்கள்- வெளியானது மிக முக்கிய அறிவிப்பு..!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 7535 காலி பணியிடங்கள்- வெளியானது மிக முக்கிய அறிவிப்பு..!

-

- Advertisement -

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் 7535 காலி பணியிடங்களை நிரப்ப திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் பணியிடங்களை நிரப்ப உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் வெளியிடப்படவில்லை என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் அந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

குறிப்பாக நடப்பாண்டில் எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக அதிகபட்சம் 4,000 பேர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்வதற்கான தேர்வு ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தவிர மற்ற கல்லூரிகளுடை அண்ணா பல்கலைகழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், அரசு பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? அதில் எத்தனை காலில் பணியிடங்கள் இருக்கிறது? எந்த மாதத்தில் தேர்வுகள் நடைபெற உள்ளது? என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

MUST READ