Homeசெய்திகள்தீப விளக்கின் தீ பற்றி 9 வயது குழந்தை பலி

தீப விளக்கின் தீ பற்றி 9 வயது குழந்தை பலி

-

தீப விளக்கின் தீ ஆடையில் பற்றி எரிந்து குழந்தை உயிரிழந்த சம்பவம்அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீப விளக்கின் தீ பற்றி 9 வயது குழந்தை பலி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகள் சுஹாசினி (9). கடந்த 2ஆம் தேதி வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த தீப விளக்கில் இருந்த தீ ஆடையில் பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுஹாசினியை சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார். இவர் உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பம் குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

MUST READ