சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் (41). இவருக்கு திருமணமாகி 2வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
அடுத்த மாதம் நடைபெற இருக்கக்கூடிய ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொரட்டூரில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது உடல் சோர்வானதால் ஜிம்மில் இருக்கக்கூடிய குளியலறைக்கு சென்று குளிர்ந்த நீரில் குளித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த சக பயிற்சியாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது யோகேஷ் கழிவறையில் மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக ஜிம்மில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் யோகேஷ் இறப்பு குறித்து கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.