Homeசெய்திகள்தலையை பக்கவாட்டில் சாய்ந்தவாறு பணியில் ஈடுபட்ட இளைஞர் - முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சி

தலையை பக்கவாட்டில் சாய்ந்தவாறு பணியில் ஈடுபட்ட இளைஞர் – முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சி

-

- Advertisement -

ஐதராபாத்தின் சந்திராயங்குட்டா பகுதியில் தலையை பக்கவாட்டில் சாய்த்துக்கொண்டு 10 மணிநேரம் ஒரு இளைஞா் வேலை செய்துள்ளாா்.

தலையை பக்கவாட்டில் சாய்ந்தவாறு பணியில் ஈடுபட்ட இளைஞா் - முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சி

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் சந்திராயங்குட்டா பகுதியில் உள்ள ஷாஹி நகரில் வசிப்பவர் அமின் அகமது அன்சாரி. இவா் இன்டர்மீடியட் 2ம் ஆண்டு        (பிளஸ் 2) படித்து முடித்துள்ளாா். இவரது தந்தை கச்சேகுடா ஆர்.டி.சி டிப்போவில் தலைமை காவலராக பணிபுரிந்தவா். அவர் கடந்த 2021ல் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துள்ளாா்.  இதன் காரணமாக கருணை அடிப்படையில் அன்சாரிக்கு, ஆர்டிசி நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பாக கண்டரைக்டர் பணி வழங்கி இருந்தது. அதன்படி அரசு பஸ்சில் கண்டக்டராக வேலையில் சேர்ந்து தனது பணியினை தொடா்ந்தாா்.

அவர் 7 அடி உயரம் உள்ள நிலையில் பஸ்சின் உயரம் 6.4 என்பதால் அவரால் நிமிர்ந்து பஸ்சில் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தலையை பக்கவாட்டில் சாய்த்துக்கொண்டு சுமார் 10 மணிநேரம் வேலை செய்யவேண்டியது அவருக்கு பொிதும் சாவாலாக இருந்தது. இதனால் அவருக்கு தினசரி கழுத்து மற்றும் முதுகு வலி, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட தொடங்கின. இதற்காக அடிக்கடி சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. அரசு பணி கிடைத்தும் தன்னால் முழு ஈடுபாடுடன்  பணியினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவா் மிகவும் வேதனையடைந்துள்ளாா்.

இந்நிலையில் அண்மையில் அமித்அகமது அன்சாரி வழக்கம் போல, தலையை பக்கவாட்டில் சாய்ந்தவாறு பணியில் ஈடுபட்டயுள்ளாா். அதே பஸ்சில் சென்ற சிலர் புகைப்படம் எடுத்து எக்ஸ் பக்கத்திலும், பிற சமூக ஊடகங்களில் பதிவிட்டாா்கள். இந்த காட்சி தெலங்கானா முழுவதும் வைரலானது. இதையறிந்த முதல்வர் ரேவந்த்ரெட்டி அவா்கள் உடனடியாக போக்குவரத்து அதிகாரிகளை அழைத்து விசாரித்ததோடு மட்டுமல்லாமல், அமின் அகமது அன்சாரிக்கு அதே துறையில் அலுவலக பணி வழங்கும்படி நேற்று உத்தரவிட்டார். முதல்வரின் இந்த அறிவிப்பால் அமின் அகமது அன்சாரி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளாா்.

17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: விசாரனையில் அதிர்ச்சி…5 பேர் மீது வழக்கு

MUST READ