Homeசெய்திகள்மருதமலை திரைப்படத்தில் வடிவேலு ஏட்டு காமெடி போல்  மனைவியை காணவில்லை என வாலிபர் கொடுத்த புகாரில்,...

மருதமலை திரைப்படத்தில் வடிவேலு ஏட்டு காமெடி போல்  மனைவியை காணவில்லை என வாலிபர் கொடுத்த புகாரில், கண்டு பிடிக்கப்பட்ட இளம்பெண்.

-

- Advertisement -

மனைவியை காணவில்லை என வாலிபர் ஒருவர் கொடுத்த புகாரில், கண்டு பிடிக்கப்பட்ட இளம்பெண், மருதமலை திரைப்படத்தில்  நடிகர் வடிவேல் நடிக்கும் ஏட்டு ஏகாம்பரம்  காமெடி போல, இவர் எனக்கு நாலாவது என்றும்  ஐந்தாவதாக சென்றவருடன்  தான் வாழுவேன் என சேலம் ஜங்ஷன் ரயில் நிலைய காவல் நிலையத்தில் அடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில்,  கடந்த ஒன்றாம் தேதி கடலூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், எனது மனைவியை காணவில்லை என புகார் கொடுத்திருந்தார். அதாவது கடந்த 28 ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு போவதற்காக சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு மனைவி புஷ்பாவோடு வந்திருந்ததாகவும் பாத்ரூம் செல்வதாக கூறி விட்டுச்  சென்ற தனது மனைவி,  காணாமல் போய்விட்டார். எனவே அவரை மீட்டுத்தர  வேண்டும் என புகார் கொடுத்ததோடு,  தனது அம்மாவின்   20 சவரன் நகை மற்றும்  15 ஆயிரம் ரூபாய் பணத்தோடு மாயமாகிவிட்டதாக கூறியிருந்தார்.

மருதமலை திரைப்படத்தில் வடிவேலு ஏட்டு காமெடி போல்  மனைவியை காணவில்லை என வாலிபர் கொடுத்த புகாரில், கண்டு பிடிக்கப்பட்ட இளம்பெண்.

புகாரின் மீது விசாரணை மேற்கொண்ட ஜங்ஷன் ரயில் நிலைய போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டதில்‍,  அந்த இளம் பெண், தற்போது  மதுரையில் உள்ள ஒரு கட்டிட தொழிலாளியுடன் குடும்பம் நடத்தி வருவது  தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் மதுரை சென்று, புஷ்பாவை மீட்டுக்கொண்டு சேலம்  வந்தனர்.  பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது தான்,  அப் பெண்ணின் கதையை கேட்டு போலீசார் அதிர்ச்சி  அடைந்தனர்.

அதாவது தன்னை காணவில்லை என புகார் கொடுத்தவர், என்னுடைய கணவனே  இல்லை என்றும்,  அவர் என்னுடைய நாலாவது என்றும்,  ஓராண்டாக அவரும் நானும் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். அவனுக்கு நான்தான் அடைக்கலம் கொடுத்து வச்சிருந்தேன் என தெரிவித்ததோடு, தனது முதல் கணவர் யார்? பின்னர் என்ன நடந்தது என்ற விவரத்தை கூறியுள்ளார். இது குறித்து போலீசார் கூறும்போது,

மருதமலை திரைப்படத்தில் வடிவேலு ஏட்டு காமெடி போல்  மனைவியை காணவில்லை என வாலிபர் கொடுத்த புகாரில், கண்டு பிடிக்கப்பட்ட இளம்பெண்.

புஷ்பாவிற்கும்  ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு அவரையும் , குழந்தைகளையும்  விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த புஷ்பா கட்டிட வேலைக்கு சென்றுள்ளார் . அப்போது வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவரோடு ஓராண்டுக்கு மேல்  வசித்து வந்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் சண்டை வந்ததால் , மற்றொரு கட்டிட  மேஸ்திரியோடு ஓராண்டு வசித்து வந்ததாகவும் புஷ்பா தெரிவித்துள்ளார். இதனை எடுத்து தான் பாலக்காட்டில் கட்டிட  வேலை பார்த்த போது, கடலூரைச் சேர்ந்த இளைஞருடன் நாலாவது  தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஓராண்டுக்கு மேல் வசித்து வந்த நிலையில் தான் , கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் இருவரும் வேலைக்கு சேர்ந்தனர். அப்போது தான் மதுரை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவருடன் புஷ்பாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாலாவது ஆளை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தவிக்க வைத்துவிட்டு , மதுரையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளருடன்  சென்றதாக விசாரணையில் புஷ்பா தெரிவித்துள்ளார். மேலும்  தற்போது மதுரைக்காரரோடு  சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன் எனவே என்னை அவரோடு வாழ விடுங்கள் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். .

ஆனால் நான்காவது ஆசாமியான கடலூரைச் சேர்ந்த வாலிபர் , புஷ்பாவை தன்னுடன் தான் அனுப்ப வேண்டுமென போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் புஷ்பா அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் செய்வதறியாது தவித்த , ஜங்சன்  ரயில் நிலைய போலீஸார்,  காணவில்லை என்ற வழக்கின் கீழ் சேலம் மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்  ஆஜர்ப்படுத்தினர். அப்போது , தன் விருப்பம் போல் வாழ அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாலும், முறைப்படி அவர்களுக்குள் ஏதும்  திருமணம் நடைபெறாததாலும், வழக்கை முடித்து வைத்த நீதிபதி, புஷ்பாவை அனுப்பி வைத்தார்.

மருதமலை என்ற திரைப்படத்தில் வடிவேலு ஏட்டு ஏகாம்பரமாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் வரும் காமெடி போல நடந்த இந்த சம்பவம் சேலத்தில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ