Homeசெய்திகள்ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு!

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு!

-

ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் சாக்கோபார், Ball – வெண்ணிலா, கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லெட் உள்ளிட்ட ஐஸ்கிரீம் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்துகிறது. இந்த விலை உயர்வு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர்த்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு...

65ML  சாக்கோ பார் விலை 20 ரூபாயிலிருந்து 25 ஆகவும், 125 ML வெண்ணிலா பால் விலை 28 ரூபாயிலிருந்து ரூ.30 ஆகவும், 100 Ml கிளாசிக் வெண்ணிலா கோன் 30 ரூபாயிலிருந்து 35 ரூபாய் ஆகவும், 100 Ml கிளாசிக் சாக்லேட் கோன் 30 ரூபாயிலிருந்து 35 ரூபாய் ஆக உயர்கிறது. இந்த விலை உயர்வு வரும் 3ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

MUST READ