Homeசெய்திகள்ஆந்திராவில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்து

ஆந்திராவில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்து

-

ஆந்திராவில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒன்பது பேர்  மரணம்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் பண்டிசேரி கிராமத்தை  பக்தர்கள் 14 பேர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  சுவாமி தரிசனத்திற்கு வந்தனர். கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு  பிறகு நேற்று இரவு  புறப்பட்டனர். இவர்கள் வாகனம் சித்தூர் –  ஐதராபாத் சாலையில் அன்னமய்யா மாவட்டம் கே.வி.பள்ளி மண்டலம் மடம்பள்ளி அருகே சென்று கொண்டுருந்தனர். அப்போது  கடப்பாவில் இருந்து சித்தூர் நோக்கி சென்ற  லாரி பக்தர்கள் வாகனத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் அனுமந்த் (30), அனுமந்த்(40), அம்பிகா(14), ஷோபா (34) மானந்தா (32) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் சடலம் பீலேரு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆந்திராவில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்து

மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்அவர்களை திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 2.30 மணிக்கு நடந்த விபத்தால் தூக்கத்திலேயே பலர் உயிர் காற்றில் கலந்தது. பக்தர்கள் சென்ற வாகனம் லாரி மோதியதில் நசுங்கியதால் டிரைவர் தூக்கத்தில் விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து கே.வி.பள்ளி காவல் நிலைய எஸ்.ஐ. லோகேஷ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆந்திராவில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்து

இதேபோல்  பெங்களூரில் இருந்து ஓடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு ஆம்புலன்சில் நோயாளியுடன் உறவினர்கள் சென்று கொண்டுருந்தனர். அம்புலன்ஸ் சித்தூர் – திருப்பதி நெடுஞ்சாலையில் தவணம் பள்ளி மண்டலம் தெல்லகுண்டலப்பள்ளி என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியது. இதில் ஆம்புலன்சில் இருந்த 7 பேரில் 4 பேர் உயிரிழந்தனர்.ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 3 பேரை  போலீசார் மீட்டு  காயமடைந்தவர்களை சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ